News February 11, 2025
வெடிகுண்டு தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739292687597_1204-normal-WIFI.webp)
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, இரவு 8 மணியளவில் அங்கு சென்ற ராணுவ வீரர்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Similar News
News February 12, 2025
இன்று 3வது ODI: அணியில் பந்த், அர்ஷ்தீப்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739315566914_785-normal-WIFI.webp)
IND VS ENG அணிகள் மோதும் 3வது ODI இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. IND இறுதி அணியில் ராகுல், ஹர்ஷித்துக்கு பதிலாக பந்த், அர்ஷ்தீப் வர வாய்ப்புள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாகவும், பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும், பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Sports 18-2, ஹாட்ஸ்டாரில் பிற்பகல் 1.30 மணி முதல் LIVEல் பார்க்கலாம். WAY2NEWSல் லைவ் ஸ்கோர் அப்டேட்களைப் பெறலாம்.
News February 12, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739296200233_785-normal-WIFI.webp)
✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.
News February 12, 2025
மம்தா மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை சுரண்டி, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக போலி கணக்கு காண்பித்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததாக சாடிய அவர், மாநிலத்தை முன்னேற்ற எதிர்கால திட்டங்களோ இல்லை என்றும் விமர்சித்தார்.