News February 11, 2025
7 வயது மகனை கொன்ற தந்தை

பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Similar News
News March 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 11, 2026
ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
கண்ணாயிரம் அந்த சமையல் Weapons எடு..

இன்றைய தலைமுறை தம்பதிகள் பலரிடம், ஏனோ வீட்டில் சமைக்கும் ஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அவர்கள் தற்போது, ஹோட்டல்கள் மூடப்படுவதால் வீட்டில் சமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சோதனைக் காலமாக தம்பதிகள் கருதினாலும், ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டதால் இம்மாதம் ஆயிரக்கணக்கில் மிச்சமாகும் என வீட்டுப் பெரியவர்கள் கூறுகின்றனர்.


