News February 11, 2025
தவெகவில் ‘இளம்பெண்கள்’ அணி உதயம்!

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தவெக, 28 அணிகளை இன்று அறிவித்துள்ளது. இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார் அணி, குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 10, 2025
நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி, நாளை 4 மாவட்டங்களில் ( தற்போதுவரை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
GALLERY: ₹2 கோடிக்கு ஏர்போர்ட் லுக்.. அசத்திய ஹர்திக்!

வாழ்க்கை ஆடம்பரமாக இருப்பது கிரிக்கெட்டர்களுக்கு சகஜம் என்றாலும், ரசிகர்களுக்கு அது பெரும் ஈர்ப்புதான். அண்மையில், ஹர்திக் பாண்டியா ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்த டிரஸ்ஸின் விலை சுமார் ₹2 கோடி இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் மட்டும் ₹1.63 கோடி இருக்குமாம். நெட்டிசன்களும், ‘பல்லிறுக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’ என கிண்டலாக பேசி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 10, 2025
சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து சாக வேண்டும்: ஜெகன்

ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் விமர்சித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, ‘இதற்கு CM சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து செத்துப் போவது நல்லது’ என்று ஜெகன் பேசியுள்ளார். ஒரு முதல்வரை இப்படி விமர்சிக்கலாமா?