News February 11, 2025

திருமணத்துக்கு முன் உடலுறவு: வைரலாகும் நடிகையின் பதில்

image

இந்தியர்களுக்கு அழகின் உருவமான ஐஸ்வர்யா ராய், அழகுடன் அறிவுக்கூர்மையும் கொண்டவர். இவர் திருமணத்துக்கு முன் சொன்ன பதில் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க பிரபலம் ஓபரா வின்ப்ரே, ‘திருமணத்துக்கு முன் உடலுறவு பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்க, ‘முத்தமிடுவதை கூட இந்தியர்கள் பொதுவில் செய்யமாட்டார்கள். திருமணத்துக்கு முன் உடலுறவு தவறு’ என்று போல்டாக பதிலளித்தார். உங்க கருத்து என்ன?

Similar News

News September 10, 2025

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

image

இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் தலைவர் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது விவாதமாகியுள்ளது.

News September 10, 2025

விஜய்க்கு பதிலடி கொடுத்த TVK தலைவர்

image

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கு திருச்சி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், விஜய்யின் மக்கள் செல்வாக்கை பார்த்து திமுக அரசு பயப்படுவதாக தவெகவினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய தவாக (TVK) தலைவர் வேல்முருகன், விஜய்யை கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது; ஆளானப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியையும், நேருவையும் சந்தித்த கட்சி திமுக என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!

image

2003-ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி தற்கொலை தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன அழுத்தம், தனிமை, பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இதன் நோக்கம். ஒரு வார்த்தை கூட ஒருவரின் உயிரை காப்பாற்றலாம். ஒருவர் உங்களிடத்தில் மனம் திறந்து பேசவும், உதவி கேட்கவும் எளிதில் அணுகக்கூடியவராக இருங்கள். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது.

error: Content is protected !!