News March 28, 2024

ரிலையன்ஸின் சந்தை மதிப்பு ₹20 லட்சம் கோடி

image

சந்தை மதிப்பு ₹20 லட்சம் கோடியை கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று ₹2987 என்ற நிலையை எட்டியதால் ஒரே நாளில் ₹70,039 கோடி லாபம் ஈட்டப்பட்டது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹20,21,000 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டிஸ்னியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2026

குமரி: மாவட்ட SP அதிரடி அறிவிப்பு

image

குமரியில் தேர்தல் விதிமுறை மீறல் (ம) பணப் பட்டுவாடா புகார்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மாவட்ட SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக எண்கள்;
நாகர்கோவில் – 7358776100
குளச்சல் – 7358068100
கிள்ளியூர் – 7358034100
கன்னியாகுமரி – 7305282100
விளவங்கோடு – 7358063100
பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.

News March 18, 2026

திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

image

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 18, 2026

FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

image

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

error: Content is protected !!