News February 11, 2025
நமது மூதாதை ஆணா? பெண்ணா?

35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் மண்டை ஓடு ஒன்றினை ஆணா பெண்ணா என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Australopithecus africanus என்ற மனித இனத்தைச் சேர்ந்த அந்த மண்டை ஓடு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பற்களில் உள்ள ஒரு வகை புரோட்டீனைக் கொண்டு அந்த மண்டை ஓடு ஆணினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுடைய வாழ்க்கை முறை, இனப்பெருக்க முறை ஆகியவற்றை அறிய முடியும்
Similar News
News September 10, 2025
இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!

2003-ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி தற்கொலை தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன அழுத்தம், தனிமை, பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இதன் நோக்கம். ஒரு வார்த்தை கூட ஒருவரின் உயிரை காப்பாற்றலாம். ஒருவர் உங்களிடத்தில் மனம் திறந்து பேசவும், உதவி கேட்கவும் எளிதில் அணுகக்கூடியவராக இருங்கள். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது.
News September 10, 2025
நாடு முழுவதும் 15 லட்சம் வங்கிக் கணக்குகள் நீக்கம்

2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்குகளை புதுப்பிக்க, வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், செயல்பாட்டில் இல்லாத 15 லட்சம் ஜன்-தன் யோஜனா கணக்குகளை, அரசு பொதுத்துறை வங்கிகள் நீக்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள 1.77 கோடி ஜன் தன் கணக்குகளில் 39.25 லட்சம் கணக்குகள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்கை செக் பண்ணுங்க
News September 10, 2025
Tech Tips: கம்மி விலைக்கு iPhone வாங்கலாம்

iPhone 17 வாங்க பணம் இல்லையா? உங்களாலும் குறைந்த விலையில் நல்ல iPhone வாங்கமுடியும். iPhone 17-ஐ ஆப்பிள் Lauch செய்துள்ளதால் பழைய மாடல்களின் விலை குறையும். அதன்படி, ₹55,000-க்கே கிடைக்கும் iPhone 15-ஐ நீங்கள் வாங்கலாம். ஒருவேளை உங்கள் பட்ஜெட் ₹40,000-க்கும் கீழ் இருந்தால் iPhone 13-ஐ வாங்குங்கள். செப்.22-ல் தொடங்கவுள்ள பிளிப்கார்ட் சேலில் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.