News February 11, 2025
அடுத்த மாதம் 3 நாள்கள் விடுமுறை

இந்த மாதம் ஒரே அரசு விடுமுறையான தைப்பூசம் விழா இன்றுடன் முடிவடைந்தது. இனி அடுத்த மாதம் 2 நாள்கள் அரசு விடுமுறை வருகிறது. மார்ச் 30 அன்று தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான் ஆகிய நாள்கள் அரசு விடுமுறைகளாகும். மார்ச் 29 சனிக்கிழமை வருவதால், இரண்டு அரசு விடுமுறைகளையும் சேர்த்தால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இதற்கேற்ப உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாமே.
Similar News
News March 19, 2026
இனி பிரச்னை இல்லை.. வந்தாச்சு GAS ATM!

ஹரியானாவின் குருகிராமில் BPCL நிறுவனம், GAS ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கேஸ் கனெக்ஷனில் உள்ள போன் நம்பர் கொடுத்து, பணம் செலுத்தி, காலி சிலிண்டரை கொடுத்தால் புது சிலிண்டர் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 30 கிலோ சிலிண்டர்கள் இங்கு கிடைப்பதில்லை. மாறாக, 15 கிலோ மட்டுமே எடை கொண்ட Fiber சிலிண்டர்கள் தான் கிடைக்குமாம். அதனால் தூக்கிட்டு போவதும் ஈசி. நம்மூரிலும் வந்தா நல்லா இருக்கும்ல?
News March 19, 2026
பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை.. மாணவர்கள் HAPPY

தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24 வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்.23-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே (ஏப்.17-க்குள்) முழு ஆண்டுத் தேர்வுகளை முடிக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதனால், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைக்கும். SHARE IT
News March 19, 2026
இன்னும் அமித்ஷா நேரம் ஒதுக்கல: EPS

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இதுவரை எட்டப்படாத நிலையில் EPS டெல்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லிக்கு வந்ததன் நோக்கத்தை நாளை கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 3-வது முறையாக EPS டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


