News February 11, 2025

FACTCHECK: ஸ்டாலினை சந்தித்தவர் உயிரிழந்தாரா?

image

முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி நெல்லை இருட்டுக்கடைக்கு சென்றிருந்தார். அன்று இரவு கடையின் ஓனர் சுலோச்சனா (87) காலமானார். இதனையடுத்து, ஸ்டாலினை சந்தித்த நிர்வாகி உயிரிழந்ததாக விஷமிகள் வதந்தி பரப்பினர். ஆனால், ஸ்டாலினை சந்தித்தது, குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினரும், தற்போது தொழிலை கவனித்து வருபவருமான கவிதா. உண்மையில் உயிரிழந்தது கடையின் நிறுவனரான பிஜிலி சிங்கின் மனைவி சுலோச்சனா.

Similar News

News March 9, 2026

இந்தியாவின் போர் நாயகன் காலமானார்

image

1965-ல் இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற Ex ராணுவ அதிகாரி KG ஜார்ஜ்(95) வயது மூப்பால் காலமானார். ராணுவ தொலைத்தொடர்பு பிரிவில் இருந்த அவர், போர் உச்சத்தில் இருந்தபோது வாகா எல்லையில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்பை பாராட்டி மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், கடைசி காலத்தை கோட்டயத்தில் கழித்துவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

News March 9, 2026

இலவசமாக வேலைக்கு ஆள்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆள்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை<<>> கிளிக் செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 9, 2026

இதுதான் ஸ்டாலினின் உண்மை முகம்: EPS

image

CM ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறிவாலயத்தின் வாசலில் கைது செய்யப்பட்டதாக கூறி, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலுக்கு முன் மக்களிடம் மனு கேட்டு அலைந்தவர், தனது ஆட்சியில் ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!