News February 11, 2025
வீட்டிற்கு ஒரு வாக்கை குறி வைக்கும் விஜய்
தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 12, 2025
தினம் ஒரு திருக்குறள்
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 176 ▶குறள்: அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். ▶ பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
News February 12, 2025
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா பங்கேற்கவில்லை: BCCI
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பங்கேற்கமாட்டார் என BCCI அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவும், ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணி விவரம்: ரோஹித், கோஹ்லி, கில், பந்த், ராகுல், ஷ்ரேயாஸ், ஹர்திக், அக்சர், சுந்தர், குல்தீப், ஜடேஜா, ஹர்ஷித், ஷமி, அர்ஷ்தீப், வருண்.
News February 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
இன்று (பிப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!