News February 11, 2025

மனிதர்களோடு விண்வெளிக்கு பறக்கும் ஈக்கள்

image

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்களுடன் சேர்த்து ஈக்களையும் அனுப்ப டாடா நிறுவன விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், விண்வெளிக்கு பறக்கும் போது அவை என்ன மாதிரியான உயிரியல் மாற்றங்கள் மற்றும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன என்பதையும் மதிப்பிட, ஈக்களை அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 12, 2025

செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

image

எடப்பாடி பழனிசாமிக்காக நடைபெற்ற அத்திக்கடவு – அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News February 12, 2025

இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல

image

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அதேபோல,15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கை மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவால் மரணமடைந்த வழக்கை விசாரித்த போது, இந்தக் கருத்தை ஹைகோர்ட் தெரிவித்தது.

News February 12, 2025

ராசி பலன்கள் (12.02.2025)

image

மேஷம் – தாமதம், ரிஷபம் – களிப்பு, மிதுனம் – உழைப்பு, கடகம் – மகிழ்ச்சி, சிம்மம் – விவேகம், கன்னி – நேர்மை, துலாம் – கடன் தீரும், விருச்சிகம் – உற்சாகம், தனுசு – நற்சொல், மகரம் – நன்மை, கும்பம் – அமைதி, மீனம் – போட்டி.

error: Content is protected !!