News March 28, 2024
வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெயில்

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று (மார்ச் 28) 100.6°F பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
வேலூர் மக்களே உங்களுக்கு சர்க்கரை நோயா?

வேலூர் மக்களே நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு (SHARE) பண்ணுங்க.
News August 20, 2025
வேலூர்: டிகிரி போதும்.. LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 20, 2025
வேலூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

வேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 21 ) மின்பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் டவுன், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், விருதம்பட்டு, செங்காநத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்