News February 11, 2025
பங்குச்சந்தை சரிவு: ரூ.10 லட்சம் கோடி மாயம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. சர்வதேச அளவில் நெகடிவான மார்க்கெட் நிலவரம், டாலர் மதிப்பு உயர்வு, டிரம்பின் தடைகள் ஆகியவற்றால் சந்தை சரிந்தது. மதியம் 1 மணி நிலவரத்தின் போதே, நிப்டி 330 புள்ளிகள் குறைந்து 23,048 ஆகவும், சென்செக்ஸ் 1074 புள்ளிகள் சரிந்து76,223 ஆகவும் இருந்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு குறைந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News March 16, 2026
கள்ளக்குறிச்சி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 16, 2026
தமிழகத்தில் 4 மாவட்ட SP-க்கள் அதிரடி மாற்றம்

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகருக்கு புதிய SP-க்களை நியமித்து ECI உத்தரவிட்டுள்ளது. கரூர்: ஹரிகிரண் பிரசாத், ஈரோடு: கிரண் ஸ்ருதி, நாகை: சுர்ஜித் குமார், விருதுநகர்: ஸ்ரீநாதா ஆகியோர் SP-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் SP ஜோஷ் தங்கையா பாரபட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். மாற்றப்பட்ட SP-க்கள் தேர்தல் தொடர்பான வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் ECI கூறியுள்ளது.
News March 16, 2026
பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.


