News February 11, 2025
ரத்தக் களறியில் பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகள் சரிவினை சந்தித்து வரும் நிலையில், சிறிய நிறுவனங்கள் கடுமையான சரிவைக் கண்டிருக்கின்றன. குறிப்பாக, வோடஃபோன் நிறுவனம் 54%, ஹிந்துஸ்தான் ஜிங்க் 49%, HUDCO 46%, CPCL 61%, ரேமண்ட் 58% சரிந்திருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
Similar News
News February 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
இன்று (பிப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 12, 2025
வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரிப்பு
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, ‘இந்தியா ஹேட் லாப்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023இல் 233 சம்பவங்கள் பதிவான நிலையில், 2024இல் அது 1,165ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தலைவர்கள் 450 முறை வெறுப்பு பேச்சுக்கள் பேசியதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2025
தினமும் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்லும் பெண்
வேலைக்காக தினமும் பல கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்கள் உண்டு. ஆனால், ஊர் விட்டு ஊர் செல்வது போல 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்பவரை பார்த்தது உண்டா? மலேசியாவின் பெனாங் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரேச்சல் கெளர் என்பவர், தினமும் கொலாலம்பூர் வரை விமானத்தில் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு சென்று வருகிறார். குடும்பத்தினரை மிஸ் செய்யக்கூடாது என்பதால் இப்படி பயணிக்கிறாராம்.