News March 28, 2024

தடுமாறும் ராஜஸ்தான் அணி

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தடுமாறி வருகிறது. ஜெய்பூரில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் 5, பட்லர் 11, சாம்சன் 15 ரன்களில் அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி தற்போதுவரை 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்துள்ளது.

Similar News

News February 20, 2026

திமுக கூட்டணியில் புதிய தமிழகம்?

image

தேர்தலையொட்டி கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. கூட்டணியில் நேற்று தேமுதிக இணைந்த நிலையில், தற்போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், இம்முறை ஆட்சியில் பங்குகேட்டு கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளார். முன்னதாக, SP வேலுமணியும் அவரை சந்தித்து பேசியிருப்பதாக தகவல்.

News February 20, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வார்னிங்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு TN அரசு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயம். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று அடுத்த வாரத்திற்குள் (பிப்.25 கடைசி நாள்) முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம்.

News February 20, 2026

தேமுதிகவை காட்டி டிமாண்ட் கூட்டும் TTV

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் அதிமுக தலைமை ஷாக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமமுக புதிய டிமாண்டை வைத்துள்ளதாம். கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவுக்கு கொடுக்கலாம் என வைத்திருந்த தொகுதிகளை, அமமுகவுக்கு ஒதுக்கும்படி TTV கேட்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், EPS கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!