News February 11, 2025
தைப்பூசம் விழா: PM மோடி வாழ்த்து

அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசம் வாழ்த்துகள் என்று PM மோடி, X-ல் வாழ்த்து பதிவிட்டுள்ளார். வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை அருளி முருகப்பெருமான் நமக்கு வழிகாட்டட்டும் என்றும், அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றி கிட்ட, இந்த புனித நாளில் வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்று சொல்லி முருகனை போற்றியுள்ளார் மோடி.
Similar News
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 3, 2026
9 ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த பாஜக

வரும் 16-ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிஹாரில் இருந்து <<19289207>>தேசிய தலைவர் நிதின் நபின்<<>> மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா(சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல், சுஜீத் குமார்(ஒடிசா), ராகுல் சின்ஹா(மேற்கு வங்கம்) ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.


