News February 11, 2025
தைப்பூசம் : காய்கறிகளின் விலை உயர்வு

வள்ளலார் நினைவு நாளையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட்டிருப்பதாலும், தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி 1KG சின்ன வெங்காயம் ₹70, கத்திரிக்காய் ₹51, கேரட் ₹50, கேரட் ₹50, வெண்டைக்காய் ₹40, தேங்காய் ₹40, பூண்டு ₹250, தக்காளி ₹22-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், பூசணிக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News March 14, 2026
இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்… அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. காலை 10 – மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் போட்டோவையும் மாற்றிக் கொள்ளலாம்.
News March 14, 2026
விடாப்பிடியில் பாஜக.. என்ன செய்யப் போகிறார் EPS?

NDA கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற கருத்தில் EPS விடாப்பிடியாக உள்ளாராம். இதற்கு குறைந்தது 160 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக, அத்தொகுதிகளை தாங்களே பிற கட்சிகளுக்கு பிரித்தளிக்கிறோம் என்றும் கூறுகிறதாம். இது EPS-க்கு பிடிக்காததால் தான் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.
News March 14, 2026
தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.


