News February 11, 2025
BREAKING: சீட் பிடிப்பதில் சண்டை: மாணவன் உயிரிழப்பு

தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பது தொடர்பாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான். சேலம் எடப்பாடியில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்ப வாகனத்தில் ஏறிய மாணவர்கள், சீட் பிடிக்க சண்டையிட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவன் எட்டி உதைத்ததில், மார்பில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால், பாதுகாப்பு கருதி, பள்ளி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 12, 2026
BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.
News March 12, 2026
பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
News March 12, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <


