News February 11, 2025
ரஜினியை சந்தித்த எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக அரசு கொறடாவுமான s.p வேலுமணி நேற்று (பிப்.10) தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். உடன் அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
Similar News
News March 5, 2026
மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News March 5, 2026
எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டது. ஒரு மனு மேல் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


