News February 11, 2025

யார் இந்த லியாஸ் தமிழரசன்?

image

சென்னை, செம்பாக்கம் திருவிக நகரைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன், தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 2018 ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

Similar News

News March 8, 2026

செங்கல்பட்டு: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

செங்கல்பட்டு: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

செங்கல்பட்டு அருகே கூண்டோடு கட்சி தாவல்

image

தி.மு.க சார்பில் மறைமலைநகர் தெற்கு நகரில் நடைபெற்ற விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்றார். மேலும், அவர் தலைமையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் க. செல்வம் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 700-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!