News February 11, 2025
இன்று டாஸ்மாக், இறைச்சி கடைகள் இயங்காது

வள்ளலார் நினைவு நாளையொட்டி வரும் 11ஆம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனுடன் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள், ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதேபோல், ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகளை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிப்பதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 22, 2026
நாளை முதல் உயர்கிறது.. மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு விமான <<16963935>>கட்டணங்களுக்கான <<>>உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News March 22, 2026
திமுகவில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணியா?

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் உள்ள வேல்முருகன், கூட்டணியா? தனித்து போட்டியா? என்ற முடிவை இன்று 11 மணிக்கு அறிவிக்கிறார். 2 நாள்களாக அதிமுக தரப்பு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தங்களுடன் இணைந்தால் பண்ருட்டி, நெய்வேலி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளை தவாகவுக்கு ஒதுக்க EPS ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேல்முருகன் என்ன முடிவை எடுக்கப்போகிறார்?


