News February 11, 2025

எவ்வளவு நேரம் பல் துலக்கலாம்?

image

பல் துலக்குவதன் மூலம், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் வயிற்றுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு நேரம் பல் துலக்குவது என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதிக நேரம் பல் துலக்குவது, பல் எனாமலை பாதிக்கும். அதனால் 2 நிமிடம் பல் துலக்கினாலே போதுமானது. 3 மாதத்திற்கு ஒருமுறை பிரஷ்-ஐ மாற்ற வேண்டும். பிரஷ் நிறைய பேஸ்ட் தேவையில்லை. ஒரு பட்டாணி அளவான பேஸ்ட் போதுமானது. நீங்க எப்படி?

Similar News

News February 11, 2025

விஜய்க்கு 20% வாக்குகள் உள்ளதா?

image

<<15429075>>தவெக தலைவர் விஜய்யை சந்தித்த பிரசாந்த் கிஷோர்<<>>, அவருக்கு 15% முதல் 20% வாக்குகள் கிடைக்கலாம் என்று சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருபுறம், புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யால் 5% வாக்குகளைக் கூட பெற முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். இதில் எது உண்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பலத்தை நிரூபிப்பாரா விஜய்?

News February 11, 2025

காங்கோவில் கொடூரம்: 55 பேர் படுகொலை

image

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (DR Congo) நேற்று அப்பாவி மக்கள் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் வடகிழக்கு பகுதியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. இதில் CODECO என்ற குழு, ட்ஜைபா கிராமங்களுக்குள் புகுந்து தாக்கியதில் 55 பேர் பலியாகியுள்ளனர். எரிக்கப்பட்டுள்ள வீடுகளில் இன்னும் பிணங்கள் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News February 11, 2025

ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு தோல்வி

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவிடம் தோல்வி அடைந்தது. இன்று நடந்த இறுதிநாள் ஆட்டத்தில் 401 ரன் இலக்கை துரத்திய தமிழ்நாடு, 202 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பிரதோஷ் ரஞ்சன் பால்(53), சோனு யாதவ்(57) ஆகிய இருவர் மட்டுமே அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இந்த ஆண்டும் தமிழகத்தின் ரஞ்சி கனவு தகர்ந்தது.

error: Content is protected !!