News February 11, 2025
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹலாசனம்

☆முதுகெலும்பு வலிமை பெறும். ☆ஞாபக சக்தி அதிகரிக்கும். ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆சிறுநீரகம், கணையம் போன்ற உள்ளுறுப்புகள் பலம் பெறும். ☆வாயுக்கோளாறுகளை போக்குகிறது. ☆நரம்பு தளர்ச்சி வராமல் பாதுகாக்கும். ☆மாதாவிடாய் & கர்ப்ப காலங்களில் இந்த பயிற்சி செய்ய கூடாது.
Similar News
News March 6, 2026
விழுந்து நொறுங்கிய விமானம்.. 2 பேர் பலி

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI நேற்று மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியதை அடுத்து, அந்த விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், அதிலிருந்த விமானிகள் அனுஜ் & பூர்வேஷ் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
News March 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,280 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 6) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹160 குறைந்து ₹14,960-க்கும், 1 சவரன் ₹1,280 குறைந்து ₹1,19,680-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹6,520 குறைந்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 6, 2026
இது ரொம்ப லேட்.. ஈரானை சாடிய டிரம்ப்!

நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைப்பதாகவும் ஆனால், இது தாமதமானது என US அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தற்போது முன்பை விட அதிகமாக சண்டையிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், டிரம்ப் கருத்தை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் மறுத்துள்ளார். ராணுவ தாக்குதல் என்ற Plan A தோற்றுவிட்டது; தற்போது அவர்களின் Plan B-யும் தோற்றுபோகும் என சாடியுள்ளார்.


