News February 11, 2025
டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, TN முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வள்ளலார் தினத்தில் ராமலிங்க அடிகளாரை வழிபடுவதுடன், தைப்பூசம் என்பதால் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் வழக்கம். அந்நாளில், TN முழுவதும் மது விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. மீறி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
ஏலக்காய் விலை ஒரே நாளில் குறைந்தது

போர் பதற்றத்தால், அரபு நாடுகளுக்கான ஏலக்காய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ ஏலக்காய் ₹2,400-லிருந்து ₹2,250 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இடுக்கி ஏலக்காய் சந்தைக்கு ஒரு நாளில் 1 லட்சம் கிலோ அளவுக்கு வரத்து இருக்கும் நிலையில், கிலோவுக்கு ₹150 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். வர்த்தகம் ₹1.50 கோடி வரை குறைந்துள்ளதால் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
News March 5, 2026
காங்., ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்., ராஜ்யசபா வேட்பாளராக அகில இந்திய காங்., செயலாளர் <<19300451>>கிறிஸ்டோபர் திலக்<<>> அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1 ராஜ்யசபா சீட் காங்.,க்கு நேற்று ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 16-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
News March 5, 2026
மா.செ.க்களிடம் தனித்தனியாக ஆலோசித்த இபிஎஸ்

அதிமுக மா.செ.க்களை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து EPS ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மா.செ.களிடம் கொடுத்து, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டிருக்கிறார். மேலும், தெருமுனை கூட்டணிகளை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தியிருக்கிறார்.


