News February 11, 2025

யார் இந்த செங்கோட்டையன்?

image

இபிஎஸ்க்கு நடைபெற்ற அவினாசி- அத்திகடவு பாராட்டு விழாவை புறக்கணித்து பரபரப்பை கிளப்பியுள்ள அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீண்ட நெடிய அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர். 1977இல் முதல் முதலாக எம்எல்ஏவான அவர், இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக கோபி தொகுதியில் 8 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கருணாநிதி, துரைமுருகனுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர் என்ற பெருமை இவருக்குண்டு.

Similar News

News March 10, 2026

விஜய்க்கு மீண்டும் CBI சம்மன்

image

கரூர் விவகாரம் தொடர்பான CBI விசாரணைக்கு டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 15-ம் தேதி காலை டெல்லி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தேதியில் விஜய் ஆஜராவார் என நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு… அவசர ஆலோசனை

image

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி மற்றும் ஜெய்சங்கருடன், PM மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தட்டுப்பாட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாம்.

News March 10, 2026

விமானங்களில் நீல நிற சீட்கள்.. காரணம் தெரியுமா?

image

விமானப் பயணம் பொதுவாக பலருக்கும் பயம் தரக்கூடும். அந்த பயத்தை போக்கி பயணிகள் அமைதியாக உணர விமானங்களில் பெரும்பாலும் நீல நிற சீட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உளவியல் ஆய்வுகளின்படி, நீல நிறம் நம்பிக்கையும் அமைதியும் தரும் நிறமாகக் கருதப்படுகிறது. மேலும், விமானத்தின் உள்ளே வெப்பநிலை குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அந்த சூழலில் நீல நிறம் பயணிகளுக்கு மனநிம்மதி மற்றும் சாந்தமான உணர்வை தர உதவுகிறது.

error: Content is protected !!