News February 10, 2025
நாகை: முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1330 திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற்றது. இதில் வேதாரண்யத்தைச் சேர்ந்த திருமலைச்செல்வன் மஞ்சுளா தம்பதியரின் மகள் ஸ்ரீ நிஷா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவியை தமிழ் தென்றல் கல்வியியல் கழக நிறுவனர் புயல் குமார் பாராட்டி பரிசு வழங்கினார். பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
News March 3, 2026
நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 3, 2026
நாகை: திமுக சார்பில் விருப்பம் மனு தாக்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஷீதர் மற்றும் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில், நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. பாரிபாலன் விருப்பமனு அளித்தார்.


