News February 10, 2025
கட்டுமான பணியின் போது தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாபட்டினத்தில் சாகுல் அமீது என்பவர் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று கட்டுமான ஈடுபட்டிருந்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகானந்தம் என்பவர் கட்டிடத்தில் உட்பக்க படியிலிருந்து தவறி கீழே விழுந்து முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
நாகை: திமுகவில் இணைந்த அதிமுக-வினர்

நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஆய்மலை கிராமத்தில் அதிமுக முன்னாள் கிளைக் செயலாளர் பிரசாத் தலைமையில், அக்கட்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் விலகி திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் தலைமையில் திமுக-வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 2025-26-ம் ஆண்டு சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை 81 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 24 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.187 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவிந்து உள்ளார். SHARE
News March 8, 2026
நாகை: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்.. போலீசார் அதிரடி

நாகை ரயில் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில்களில் சோதனை செய்தப்போது காரைக்கால்- வேளாங்கண்ணி இடையே சென்ற பயணிகள் ரயிலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த 8 பைகள் கிடந்துள்ளது. இதனை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.


