News March 28, 2024
தேனி: குளு குளு மலர் கண்காட்சி

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Similar News
News October 19, 2025
பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (48). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். பெரியகுளம் தேனி சாலை டி.வி.எஸ்., ஷோரூம் அருகே வந்த போது அதி வேகமாக ஜெரோம் என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ஜெகதீசன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு (அக்.18) பதிவு செய்து விசாரணை
News October 19, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 19, 2025
பெரியகுளம் அருகே பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி 11.வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாந்தி (50). இவர் பெண்கள் சுகாதார வளாகம் செல்லும் பாதையில் இருள் சூழ்ந்து இருந்ததால் மின் விளக்கு அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் எங்களை கேட்காமல் எப்படி மின் விளக்கு அமைக்கலாம் என கேட்டு அதே பகுதியை சேர்ந்த சிவன் உள்ளிட்ட 4 பேர் சாந்தியை தாக்கி உள்ளனர். தென்கரை போலீசார் சிவன் உட்பட 4 பேர் மீது வழக்கு (அக்.18) பதிவு