News February 10, 2025

முதல்வரை சந்தித்த புதிய நிர்வாகி

image

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியப் பல்கலைக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (பிப்.10) நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது கலைஞரின் புதையல் என்ற புத்தகம் முதல்வருக்கு ரவீந்திரன் வழங்கினார்.

Similar News

News August 18, 2025

வீடியோ பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News August 18, 2025

சென்னை: சினிமா, ஊடகதுறையில் சாதிக்க ஆசையா?

image

வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யலாம். SHARE பண்ணுங்க.

News August 18, 2025

சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

image

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)

error: Content is protected !!