News March 28, 2024
வாக்குக்கு பணமா! நோ சொல்லுங்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வருகிறது. இந்நிலையில், வீடு வீடாக பணப் பட்டுவாடா நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்திருப்பதால் ஆங்காங்கே சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு தனிநபர் ஆவணங்கள் இல்லாமல் ₹50,000க்கும் மேல் கொண்டு செல்லக் கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உங்களது வாக்குக்கு யாராவது பணம் கொடுத்தால் ‘நோ’ சொல்லுங்க.
Similar News
News March 20, 2026
என்னப்பா இது விசிலுக்கு வந்த சோதனை..

கோவையில் ECI சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மாணவிகள் நடனமாடியபோது, ஒரு மாணவி விசில் ஊதினார். உடனடியாக தேர்தல் அதிகாரி ஒருவர் விசிலை மேடையிலேயே பிடுங்கினார். இது தேர்தல் நடவடிக்கையே என அதிகாரிகள் கூறினர். ஆனால், தொடக்கம் முதலே மத்திய, மாநில அரசுகளால் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
News March 20, 2026
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?
News March 20, 2026
CPI கட்சியால் CPM அதிருப்தியா?

காங்.,க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கிய திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இரண்டு இலக்க சீட்டை கொடுக்க தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்., தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், CPI கட்சி 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டதால், CPM அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.


