News February 10, 2025

5 கிமீ போக 5 மணிநேரம்… திக்கித் திணறும் டிராபிக் ஜாம்

image

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரக்யாராஜ் செல்கிறார்கள். இதனால், அந்நகரமே ஸ்தம்பித்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், பிரக்யாராஜ் சங்கம் ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும், சுமார் 300 கிலோ மீட்டருக்கு உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News February 11, 2025

‘ஊழல்’.. அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி

image

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை அண்ணாமலை பரப்புகிறார். மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளின்படி தரமான வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டது. வீண் பழி சுமத்தி, களங்க ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

3,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் மெட்டா

image

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகம் முழுவதும் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த பணி நீக்கம் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

News February 11, 2025

ATM PIN நம்பர் மறந்துவிட்டதா? மாற்ற ஈசி டிப்ஸ்!

image

*கணக்கு இருக்கும் வங்கியின் ATM மையத்தில், கார்டை சொருகியதுமே Forget PIN ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து, இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை கொடுத்தால், OTP வரும். அதனை பதிவிட்டு, PINஐ மாற்றலாம். * Netbankingல் ATM கார்டு ஆப்ஷனில் Change PINஐ கிளிக் செய்யவும். கார்டின் CVV, கார்டின் கடைசி சில நம்பர்கள், காலாவதி தேதி ஆகியவற்றைப் பதிவிடவும். பின்னர், OTPயை பதிவிட்டு, PINஐ மாற்றலாம்.

error: Content is protected !!