News February 10, 2025
தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

பனையூரில் TVK தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இவர் தவெகவுக்கு பணியாற்ற ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
Similar News
News September 10, 2025
வரலாற்று சாதனையை படைப்பாரா அர்ஷ்தீப்?

ஆசிய கோப்பையில் இந்திய அணி நாளை UAE-ஐ எதிர்கொள்கிறது. இதில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் எடுத்தால், வரலாற்று சாதனையை படைப்பார். சர்வதேச டி20-களில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும், உலகளவில் விரைவாக 100 சர்வதேச டி20 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் செய்ய வாய்ப்புள்ளது. இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
News September 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.