News February 10, 2025

தமிழகம் கலவர பூமி ஆகும்: அன்புமணி

image

69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழகம் கலவர பூமி ஆகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அன்புமணி, 69% இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த முடியுமா என்று SC கேள்வி எழுப்பினால் முதல்வரிடம் பதில் உள்ளதா என வினவியுள்ளார்.

Similar News

News March 22, 2026

நாமக்கல்: முட்டை விலை 20 காசுகள் சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.45-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை சரிவடைந்துள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News March 22, 2026

மணப்பெண்ணை நிர்வாணம் ஆக்கும் வினோத வழக்கம்

image

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பினி கிராமத்தில் திருமணமான புதுமண தம்பதிகளுக்கென வினோத வழக்கம் ஒன்று நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது. திருமணமான பிறகு புதுமணப்பெண் 7 நாள்களுக்கு ஆடையின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும். அதேபோல், புது மாப்பிள்ளை மது அருந்தக் கூடாதென்பதே அந்த வழக்கம் ஆகும். இந்த வழக்கத்தை கடைபிடித்தால் 2 பேருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிட்டும் என நம்பப்படுகிறது. உங்கள் கருத்து?

News March 22, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்.. திடீர் திருப்பம்

image

புதுச்சேரி <<19448036>>அதிமுக வேட்பாளர்களை<<>> EPS இன்று அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக புதுச்சேரி அதிமுக துணை செயலாளரும் Ex MLA-வுமான வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும், CM ரங்கசாமி முன்னிலையில் தன்னை NR காங்கிரஸில் இணைத்துக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!