News March 28, 2024
மான் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் காயம்

தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 11, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரிய இருக்கா?

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.
News February 11, 2026
தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

எஸ்.வி. சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில் பூசாரி ரமேஷ் பாபு (56). இவர் தனது வீட்டில் வேலை செய்த 9-ம் வகுப்பு மாணவியுடன் 3 மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த மாணவியை அரசு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 2 மாத சிசு வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
News February 11, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய விவசாயி!

கிருஷ்ணாபுரம் அடுத்த ரங்கன் கொட்டாய்யை சேர்ந்த விவசாயி சஞ்சீவன் (34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சஞ்சீவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


