News February 10, 2025

பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு சம்மன்

image

தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு, வடலூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சீமான் பேசிவருவதாக மாநிலம் முழுவதும் த.பெ.தி.க, வி.சி.கவினர் அளித்த புகாரின் பேரில், 60 போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

News March 4, 2026

காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

image

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

image

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.

error: Content is protected !!