News February 10, 2025

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்

image

தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 31ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,730க்கும், சவரன் ரூ.61,840க்கும் விற்பனையானது. ஆனால் இன்று காலை நேர வர்த்தகப்படி ஒரு கிராம் ரூ.7,980க்கும், சவரன் ரூ.63,840க்கும் விற்பனையானது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 18, 2026

FLASH: தேர்தல் களத்தில் சசிகலாவின் அடுத்த மூவ்!

image

அபுமமுக கட்சியில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெறலாம் என சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை விருப்பமனு வழங்கப்படும் எனவும், வரும் 22-ம் தேதி இரவு 7 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்டா, தென் மாவட்டங்களில் 60 தொகுதிகளை சசிகலா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 18, 2026

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

image

கேரளத்தில் CPM மூத்த தலைவர் TK கோவிந்தன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தளிப்பறம்பா தொகுதியில் சொந்த கட்சி வேட்பாளர் PK ஷியாமலாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட முயன்றதால் கோவிந்தன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பதவி ஆசையால், காங்., கைக்கூலியாக கோவிந்தன் மாறிவிட்டதாக CPM நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீட்டு கொடுக்காததால் <<19403862>> CPI-ன் MLA முகுந்தன்<<>>, நேற்று பாஜகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.

News March 18, 2026

900 பேர் பலி.. அடுத்த சோகம்

image

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 67 பெண்கள் மற்றும் 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், 2,221 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!