News February 10, 2025
டெடி டே: பொம்மை கலருக்கும் அர்த்தம் உண்டு தெரியுமா?

Valentine வாரத்தில் இன்று டெடி டே. பாசத்தின் அடையாளமாக டெடி பியர் கூறப்படுகிறது *நீங்கள் ஆழமாக காதலிக்கிறீர்கள் என்றால், சிவப்பு நிற டெடியை பரிசளியுங்கள் *காதலர் மென்மையானவர் என்றால், பிங்க் டெடியை பரிசளிக்கலாம் *காதலர் மிகவும் அமைதியானவர் என்றால், நீல நிற டெடியை பரிசளிக்கலாம் *ரொம்ப ஜாலியான ஆள் உங்க காதலர் என்றால், மஞ்சள் நிற டெடியை பரிசளிக்கலாம் நீங்க என்ன கலர் கொடுக்க போறீங்க?
Similar News
News March 7, 2026
மோசமான ஹேர் கட்.. ₹25 லட்சம் இழப்பீடு

2018-ல் டெல்லி ITC Maurya ஹோட்டலில் உள்ள சலூனில் மோசமாக முடி வெட்டியதற்காக மாடல் ஒருவர் ₹25 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார். அவர், ஸ்டைலிஸ்ட் செய்த ஹேர் கட்டால் மாடலிங் வாய்ப்புகளை இழந்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதற்கு நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹2 கோடி இழப்பீடு அறிவித்தது. ஆனால் ITC இதை எதிர்த்து SC-ஐ அணுகியது. இதையடுத்து இழப்பீடு தொகை ₹25 லட்சமாக திருத்தம் செய்யப்பட்டது.
News March 7, 2026
விலை மொத்தமாக சரிந்தது.. கிலோ ₹5 மட்டுமே

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், தொடர் சரிவில் இருந்த தக்காளி இன்று 1 கிலோ வெறும் ₹5-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம்(₹25), உருளைக் கிழங்கு(₹20), சுரைக்காய்(₹20) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதேபோல், கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் விலை எப்படி உள்ளது?
News March 7, 2026
BREAKING: விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு ஆதரவு

சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் எதிரொலித்துள்ளது. விஜய்க்கு எதிராக SM-ல் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். விவாகரத்து விவகாரம் மூலம் விஜய்யின் இமேஜை கெடுக்க திமுக முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவை சிறுமைப்படுத்த முயன்றது போலவே, விஜய் விவகாரத்திலும் திமுக முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.


