News February 10, 2025

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.87.95ஆக சரிவைக் கண்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு டாலருக்கு ரூ.63 ஆக இருந்த மாற்று விகிதம் தற்போது ரூ.87.95ஆக உள்ளது. இது, பெட்ரோல்-டீசல் விலை, மருந்துகள், தங்கம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களுடன் நேரடியாகத் தொடர்புடையதால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Similar News

News March 4, 2026

கடிதம் எழுதிவிட்டு தூங்க சென்றுவிடுவார் CM: விஜய்

image

மீனவர்கள் கைது செய்யப்பட்டால் PM-க்கு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்.

News March 4, 2026

கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து… புதிய தேர்தல் அறிவிப்பு

image

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

News March 4, 2026

கருணாநிதியால் கூட இதை செய்ய முடியல: விஜய்

image

தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என விஜய் பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது விஜய் விமர்சனம் வைத்துள்ளார்.

error: Content is protected !!