News February 10, 2025

4 நாள்களில் வசூலை அள்ளிய விடாமுயற்சி!

image

விடாமுயற்சி படம் முதல் 4 நாள்களில் சுமார் ₹131 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாளை தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் எப்படி இருந்துச்சு.. நீங்க சொல்லுங்க

Similar News

News March 4, 2026

நடிகர் ரஜினிகாந்த் வழக்கு.. பரபரப்பு உத்தரவு

image

சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான கட்டடத்தை ரஜினிகாந்த் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்த இடத்துக்கு வரி செலுத்தும்படி, ரஜினிக்கு சேவை வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், விசாரணையின் முடிவில், சேவை வரித்துறை விதித்த வரியை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News March 4, 2026

திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுகவுக்கு உள்ள 4 இடங்களில் காங்., & தேமுதிகவுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபா தேர்தல் மார்ச் 16-ல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு உள்ள 2 சீட்களில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

News March 4, 2026

சற்றுமுன்: திமுகவுடன் கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

image

ஆதவ் – ராகுல் சந்திப்பு, காங்., தலைவர்களின் தவெக ஆதரவு நிலைப்பாடு என தவெக – காங்., கூட்டணிக்கான யூகங்கள் கடந்த மாதம் முழுவதுமே தமிழக அரசியலில் சுழன்றடித்தன. மேலும் சீட் ஒதுக்கீட்டில் திமுக இறங்க மறுப்பதால் தவெகவுடன் செல்லலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுகவுடன் காங்., <<19298958>>தொகுதிப் பங்கீடு<<>> அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. இது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!