News February 10, 2025
கழகத்தில் மீண்டும் கலகம்.. அடுத்தடுத்து வெளியாகும் வீடியோ

அதிமுகவில் Ex அமைச்சர்கள் அடுத்தடுத்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மரியாதை இல்லை, போஸ்டர்களில் பெயர் இல்லை என்பதால் டீசண்டாக ஒதுங்கி இருக்கிறேன் என நேற்று கோகுல இந்திரா தனது வேதனையை வெளிப்படுத்திருந்தார். அதன் சுவடு மறைவதற்குள் அதிமுகவில் MGR, ஜெயலலிதாவுக்கே முக்கியத்துவம் இல்லை என இன்று <<15413926>>செங்கோட்டையன்<<>> கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 24, 2026
தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகை வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகையை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.24) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் உதவி ஆட்சியர் பயிற்சி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 24, 2026
ரேஷன் கார்டுகளுக்கு.. இரவில் இனிப்பான அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ₹1,000 பரிசுத்தொகை அளிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.
News March 24, 2026
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது வடகொரியா

தென் கொரியாவை நிரந்தர எதிரியாக அறிவித்த கிம் ஜாங் உன், வட கொரியாவில் அணு ஆயுத திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக அணு ஆயுதக் குறைப்பை முன்வைத்த US-ன் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் வட கொரியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தயக்கமின்றி, இரக்கமின்றி எதிர்கொள்வோம் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


