News February 10, 2025

பேட்டிங்கை ரசித்தேன்: ரோஹித் நெகிழ்ச்சி

image

Engக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணிக்காக நின்றது மகிழ்ச்சி அளித்ததாக ரோஹித் ஷர்மா நெகிழ்ந்துள்ளார். தனது பேட்டிங்கை ரசித்ததாக கூறிய அவர், பேட்டிங் செய்ய வெளியே வந்ததும் முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க முடிவு செய்ததாகவும், தனது உடலை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளில் சரியான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் பகிர்ந்தார். அத்துடன், கில் மிகவும் உன்னதமான வீரர் என்றும் பாராட்டினார்.

Similar News

News February 11, 2025

எவ்வளவு நேரம் பல் துலக்கலாம்?

image

பல் துலக்குவதன் மூலம், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் வயிற்றுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு நேரம் பல் துலக்குவது என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதிக நேரம் பல் துலக்குவது, பல் எனாமலை பாதிக்கும். அதனால் 2 நிமிடம் பல் துலக்கினாலே போதுமானது. 3 மாதத்திற்கு ஒருமுறை பிரஷ்-ஐ மாற்ற வேண்டும். பிரஷ் நிறைய பேஸ்ட் தேவையில்லை. ஒரு பட்டாணி அளவான பேஸ்ட் போதுமானது. நீங்க எப்படி?

News February 11, 2025

இதுவே ஓவரா? இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. சீமான்

image

பெரியார் குறித்து இப்போ தான் பேச தொடங்கி இருக்கேன். இதுவே ஓவர்னா எப்படி என்று அண்ணாமலைக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நான் முதலில் அங்கே தான் ( பெரியார் கொள்கை) இருந்தேன். ஒரு காலம் வரும்போது எனக்கு தெளிவு வந்து, இது கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை. துண்டாடப்பட வேண்டிய கூட்டம் எனப் புரிந்தது. மற்றவர்கள் போல் நான் பார்த்து பேசவில்லை, படிச்சுட்டு பேசுறேன் எனத் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

காலையில் செய்யக்கூடாத ‘3’ விஷயங்கள்

image

*காலை எழுந்தவுடன், மொபைல் போனில் மூழ்கிட வேண்டாம். அது உங்களின் நேரத்தை வீணடிப்பதோடு, உங்கள் கண்களை காலையிலேயே சோர்வடைய செய்யும் *காலை உணவை எப்போதும் Skip பண்ணிட வேண்டாம். நாள் தொடங்கும் போதே, சுறுசுறுப்பாக இருக்க, காலை உணவு இன்றியமையாதது. அவசர அவசரமாக கிளம்பும்போதும், சாப்பிட்டு விட்டு கிளம்பவும் *காலையில் எழுந்ததும் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கானது. இதனால் உடலின் Metabolism பாதிக்கும்.

error: Content is protected !!