News February 10, 2025
இங்கிலாந்தின் மோசமான சாதனை

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி மோசமான சாதனை படைத்துள்ளது. 300 ரன்களுக்கு மேல் குவித்தும் அவர்கள் அதிக போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். அவ்வாறு இங்கிலாந்து 99 போட்டிகளில் 28 முறை தோல்வியடைந்துள்ளது. IND (27), WI (23), SL(19) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சந்திக்கும் நான்காவது தொடர் தோல்வி இதுவாகும்.
Similar News
News March 12, 2026
மீண்டும் 100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $100ஐ தாண்டியுள்ளது. போர் தொடங்கிய பிறகு $120ஐ எட்டியிருந்த விலை, பதற்றம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் $89 ஆக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரல் $130 வரை அதிகரித்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News March 12, 2026
எம்ஜிஆரை இழிப்படுத்திய நடிகர்.. விஷால் கண்டனம்!

* <<19348306>>எம்ஜிஆரை <<>>அவதூறாக பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார் * ரவி மோகனின் ‘Bro code’ படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது *ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் இதுவரை 57.9 கோடி வசூலித்துள்ளதாம் *‘மெளனம் பேசியதே’ படத்திற்கு பிறகு அமீரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.


