News February 10, 2025
ஜவ்வரிசியில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் பெற்ற பிறகே உணவு வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் ஜவ்வரிசி ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்வதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
சேலம்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 14, 2026
BREAKING: சேலத்தில் மகனை கொலை செய்த தந்தை

இன்று சேலம் தாதனூரில் மது குடிக்கப் பணம் கேட்டு குடும்பத்தினரை அரிவாளுடன் துரத்திய மகன் சூரிய பிரகாஷை (24), தந்தை காமராஜே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். மகனின் தொடர் டார்ச்சரால் ஆத்திரமடைந்த தந்தை, அவர் தூங்கும்போது இக்கொலையைச் செய்துள்ளார். தகவலறிந்த வீராணம் போலீசார் காமராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 14, 2026
சேலத்தில் நவீன சாலையைத் தொடங்கி வைத்த முதல்வர்!

சேலம் மாவட்டத்தில் ரூ.985.18 கோடி மதிப்பீட்டில், 36.395 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் – சங்ககிரி – திருச்செங்கோடு – பரமத்தி சாலையைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் மொத்தம் 11 சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டதில், சேலத்தின் இந்த மெகா சாலைத் திட்டம் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


