News February 9, 2025
நாளை முதல் 3 நாள்களுக்கு இலவசம்

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் 3 நாள்களுக்கு தரிசனம் இலவசம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் விதமாக 10, 11, 12 தினங்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக பழனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்.. காரசார விவாதம்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் லோக்சபாவில் விவாதத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய காங்., MP கே.சி.வேணுகோபால், பல ஆண்டுகளாக துணை சபாநாயகரை அரசு நியமிக்கவில்லை; இது அரசமைப்பில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான அவை நடவடிக்கைகளை தலைமை தாங்க ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News March 10, 2026
தோசை, ஆம்லெட், வடை, பஜ்ஜி சாப்பிட முடியாது

TN முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் முதல் சிறு டீ கடைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் பிரச்னை சரியாகும் வரை பல்வேறு ஊர்களில் ஹோட்டல்கள், டீ கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஹோட்டல்களில் தோசை, ஆம்லெட் கிடைக்காது என்றும் டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்றவை கிடைக்காது என்றும் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
News March 10, 2026
TR பாலு, RS பாரதிக்கு ஜெயில் உறுதி: அண்ணாமலை

தான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளில் TR பாலு, RS பாரதி இருவருக்கும் நிச்சயம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக பாஜக சதித்திட்டம் என RS பாரதி பேசியதாக அவர் மீது அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். இன்று, அந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி, RS பாரதிக்கு எதிரான சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார்.


