News February 9, 2025

அதிக சதம்: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித்

image

இந்தியாவிற்காக அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கேப்டன் ரோஹித் ஷர்மா (49) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 81, ரோஹித் ஷர்மா 49, ராகுல் டிராவிட் 48, கங்குலி 38, விரேந்திர சேவாக் 38 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Similar News

News March 16, 2026

வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.

News March 16, 2026

உலக சாம்பியன்களை பாராட்டிய CM ஸ்டாலின்

image

T20I WC-ஐ தொடர்ந்து 2-வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அப்போது T20I அணியின் ஜெர்சி & தொப்பியை CM-க்கு இருவரும் பரிசளித்தனர். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் உடனிருந்தார்.

News March 16, 2026

கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

image

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.

error: Content is protected !!