News March 28, 2024

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

image

பிளஸ் 2 கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற கணிதப்பாடத்திற்கான வினாத்தாளில் கேள்வி எண் 17, 25 மற்றும் 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுமென கூறப்படுகிறது.

Similar News

News October 17, 2025

மழையில் இந்த 5 பொருள்களை ரெடியா வெச்சிக்கோங்க!

image

மழை சீசனில் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமானதாகும். இந்த பொருள்கள், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். அப்படி மழையின் போது நாம் ரெடியாக வைத்திருக்க வேண்டிய 5 பொருள்களை மேலே படங்களாக கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணி பார்க்கவும். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News October 17, 2025

171 நாள்களுக்கு பிறகு EPS தான் முதல்வர்: நயினார்

image

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போக்குவரத்து ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் என யார் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் நயினார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக ஆட்சியின் முடிவு நாளை மக்கள் எண்ணிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 171 நாள்களுக்குப் பிறகு நம்ம(NDA) ஆட்சி மலரும் எனவும், EPS முதல்வராவார் என்றும் சூளுரைத்தார்.

News October 17, 2025

மழைக்காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

image

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பிரச்னையில் இருந்து தப்பிக்க, இந்த கசாயத்தை பருகும் படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மிளகு, இஞ்சியை நன்கு இடித்து கொள்ளவும். தண்ணீரில் ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும், அதில் மிளகு, இஞ்சியை சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு, வடிகட்டி, ஆற வைத்தால் மூலிகை கசாயம் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!