News March 28, 2024
திருச்சி அருகே கோர விபத்து

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் தொட்டியம் சாலையில் சுருட்ட பாளையம் பேருந்து நிலையம் அருகே இன்று டூவீலர், கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
நில மோசடி – திருச்சி காவல்துறை எச்சரிக்கை

திருச்சி காவல்துறை நில மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், போலியான ஆவணங்கள் மூலம் சொத்து விற்பனையாளர் அல்லது உண்மையான உரிமையாளர் போல போலியான பட்டா, வில்லங்கச் சான்றிதழ் அல்லது பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. நிலத்தின் அசல் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வாங்கும் போது, இது போன்ற ஏமாற்று வேலைகள் நடக்கும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
News March 11, 2026
மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் செயல்படும் தொடக்கப்பபள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாஸ்கர்(57) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் இன்று ஆசிரியர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி(55) ஆகியோரை கைது செய்தனர் .
News March 11, 2026
திருச்சிக்கு வரும் NDA கூட்டணி தலைவர்கள்!

பஞ்சப்பூரில் இன்று(மார்ச் 11) NDA கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்காக பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நேற்று பாஜக மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை EPS, பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ், TTV உள்ளிட்ட கூண்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் 3வது முறையாக ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர்.


