News February 9, 2025

ஒன்னேகால் நிமிடத்தில் ஓவரை முடித்த ஜட்டு

image

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் 24ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினர். அதனை அவர் வெறும் 73 நொடிகளில் வீசி முடித்தது சாதனை படைத்துள்ளார். சராசரியாக ஒரு ஓவரை வீசுவதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். சில ஸ்பின்னர்கள் 3 நிமிடத்தில் கூட வீசுவர். முன்னதாக, டேரில் டஃபி 1 நிமிடம் 56 நொடிகளில் ஓவர் வீசியதே சாதனையாக இருந்தது.

Similar News

News March 21, 2026

சமரச பேச்சுவார்த்தை: CPM அலுவலகத்தில் வைகோ

image

சென்னை தி.நகரில் உள்ள CPM அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளார். தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து CPM வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வைகோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

News March 21, 2026

துரந்தர் 2: இரண்டே நாள்களில் ₹331 கோடி வசூல்

image

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ‘துரந்தர் 2’ படம் 2 நாள்களில் ₹331 கோடி வசூல் குவித்துள்ளதாக Sacnilk தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ₹267 கோடி வசூலித்துள்ள இப்படம் உலக அளவில் ₹64 கோடி வசூலை ஈட்டியுள்ளது. Preview ஷோவிலேயே ₹51 கோடி வசூலித்து புதிய சாதனையையும் இப்படம் படைத்திருந்தது. விடுமுறை தினமாக உள்ளதால், ஒரே வாரத்தில் ₹600 கோடியை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.

News March 21, 2026

இன்ஸ்டா ரீல்ஸ்.. வந்தாச்சு சூப்பர் அப்டேட்!

image

இன்ஸ்டா ரீல்ஸை நிறுத்தி (Pause) பார்க்க வேண்டுமென்றால் போன் திரையில் விரலால் அழுத்தி பிடிக்க வேண்டும். இந்த Press and hold முறையை மாற்ற வேண்டும் என இன்ஸ்டா பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுக்காக, தற்போது இன்ஸ்டா Single Tap முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது, ரீல்ஸ் பார்க்கும்போது ஒருமுறை திரையை தொட்டால் போதும், நீங்கள் பார்க்கும் ரீல்ஸ் வீடியோ Pause ஆகிவிடும்.

error: Content is protected !!