News February 9, 2025

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 205 மனுக்கள் வரப்பெற்றன

image

செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம் நேற்று (பிப்.8) நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் என 205 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன் அடைந்தனர்.

Similar News

News September 30, 2025

திருப்போரூர்: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

image

தி.நகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (19). இவர் நேற்று (செப்.29) மதியம் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ்குமார் மட்டும் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார். கூடவந்த நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை சடலமாக மீட்டனர்.

News September 30, 2025

செங்கல்பட்டு: வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவைகளையும் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 98849 24299 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 30, 2025

செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!