News February 9, 2025
கிரிக்கெட்: ஆரவாரம் செய்த இளைஞர் மூச்சுத்திணறி சாவு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). இவர், நேற்று (பிப்.8) தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடினார். ஆரவாரம் செய்த கார்த்திக்கிற்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
வேற லெவலாக மாறப்போகும் சென்னை

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நாளை 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் அமைப்பு, மின்சார வழித்தடம், ரயில் நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 10ம் தேதி முதல் பறக்கும் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
News March 4, 2026
தி.நகர் கிளைமாக்ஸ்; நூலிழையில் தப்பிய திமுக!

கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜே.கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவே இங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதற்குச் சான்று. அதிமுக இந்த முறை தனது பலமான வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், வணிக வளாகங்களில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குறையாக உள்ள நிலையில், இந்த முறை வெற்றி யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 4, 2026
சென்னையில் டெலிவரி ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை புளியந்தோப்பில் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் தினேஷ் (26) மீது முன்விரோதம் காரணமாக நண்பர் கடப்பா செந்தில் உள்ளிட்ட 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த தினேஷ் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜமாணிக்கம் (28), செந்தில் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


