News March 28, 2024
நடிகர் விவேக் மகளுக்கு திருமணம் முடிந்தது

மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021இல் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
விருதுகளை அள்ளிக்குவித்த மஞ்சும்மல் பாய்ஸ்

2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் (சௌபின் ஷாஹிர்) , சிறந்த கலை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர் (வேடன்), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த Sound Design மற்றும் Sound Mixing ஆகிய 9 விருதுகளை வென்றுள்ளது.
News November 3, 2025
சற்றுமுன்: தடாலடியாக குறைந்தது

ZEPTO தனது இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகையை தடாலடியாக குறைத்துள்ளது. முன்பு ₹199-க்கு மேல் ஆர்டர் செய்தால் மட்டுமே இலவச டெலிவரி வசதி இருந்தது. அதற்கு கீழ் நீங்கள் ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணமாக ₹30 செலுத்த வேண்டும். தற்போது குறைந்தபட்ச ஆர்டர் தொகை பாதியாக ₹99 என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், இலவச டெலிவரிக்காக யாரும் எக்ஸ்ட்ராவா ஆர்டர் பண்ண வேண்டாம்.
News November 3, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.


